/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
/
பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 01, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 34வது வார்டுக்குட்பட்ட ஆடிசன்பேட்டை தெருவின் துவக்கத்திலேயே, பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, 15 நாட்களாக தேங்கி நிற்கிறது.
கழிவுநீர் தேங்குவதால், பாசி படர்ந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவது பற்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
கழிவுநீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். உடனடியாக, கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.