/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் வெள்ளகுளத்தில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் வெள்ளகுளத்தில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் வெள்ளகுளத்தில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் வெள்ளகுளத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : மே 03, 2024 11:05 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டு, வெள்ளகுளம் தெற்கு கரை தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவு நீர் வழிந்தோடி வருகிறது.
இதனால், சாலையில் செல்வோர் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால், கழிவு நீர் பாதசாரிகள் மீது தெளிப்பதால் மனஉளச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஓராண்டுக்கும் மேலாக சாலையில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதாக, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.