/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் கோளிவாக்கத்தில் கொசு தொல்லை
/
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் கோளிவாக்கத்தில் கொசு தொல்லை
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் கோளிவாக்கத்தில் கொசு தொல்லை
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் கோளிவாக்கத்தில் கொசு தொல்லை
ADDED : ஏப் 22, 2024 05:30 AM

கோளிவாக்கம், : காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் ஊராட்சி, காலனி சாலையில் வசிப்போரின் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய் ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகள் வழங்கும் திட்டம், 2021 - -22ன் கீழ் காலனி சாலையில் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
ஆனால், கால்வாயில் விடப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் முறையான வழித்தடம் அமைக்கவில்லை.
கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்குவதால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு சூழல் உள்ளது. எனவே, கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேறும் வகையில் முறையான வழித்தடம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.