/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் வழி இல்லாததால் கழிவுநீர் தேக்கம்
/
கால்வாயில் வழி இல்லாததால் கழிவுநீர் தேக்கம்
ADDED : ஏப் 16, 2024 11:11 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 2வது வார்டு, மெக்ளின்புரம் குடியிருப்பு பகுதியில் ஆர்.டி., தெரு உள்ளது. இத்தெருவில், சில நாட்களுக்கு முன், மழைநீர் வடிகால்வாய் புதிதாக கட்டப்பட்டது.
அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தற்போது இக்கால்வாயில் விடப்படுகிறது. ஆனால், இக்கால்வாயில் செல்லும் கழிவுநீர், வெளியேற்றுவதற்கான வசதி ஏற்படுத்தப்படாததால், கால்வாயிலேயே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரிப்பதோடு, துர்நாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதித்து வருகிறது.
எனவே, இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயில் இருந்து, தண்ணீர் வெளியேற்றும் விதமாக, அப்பகுதி பிரதான சாலையையொட்டி உள்ள இணைப்பு கால்வாய் பகுதியில் துளை போட்டு கழிவுநீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

