ADDED : மார் 01, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழம்பி, காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி, அமராவதிபட்டிணம் பிரதான சாலையில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்து, மண் திட்டுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் இருந்தது.
இதனால், கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் முழுமையாக வெளியேறாததால், அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அமராவதிபட்டிணம் பிரதான சாலையில் உள்ள கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்கவேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கீழம்பி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது.