/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண்ணை கொட்டி ஏரி கால்வாயை மூட முயற்சி மூன்றாவது முறையாக நடப்பதால் அதிர்ச்சி

ADDED : மே 10, 2024 12:50 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பஞ்சுப்பேட்டை பெரிய தெருவையொட்டி, கருப்படித்தட்டடை ஊராட்சி எல்லையில், பொன்னேரிக்கரை ஏரிக்கு செல்லும் பிரதான பாசன கால்வாய் உள்ளது.
பாசனத்திற்கு தண்ணீர் செல்வது மட்டுமல்லாமல், மழைநீர் வடிந்து இக்கால்வாய் மூலம், பொன்னேரிக்கரைக்கு செல்கிறது. காஞ்சிபுரம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இக்கால்வாய் பராமரிக்கப்படுகிறது.
இக்கால்வாயில், அப்பகுதியில் வசிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவர், கால்வாயை துார்க்கும் வகையில், மண்ணை கொட்டி கால்வாயை மூட முயற்சிப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
நீர்வள ஆதாரத் துறையினர் மண்ணை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், மூன்றாவது முறையாக, கால்வாயை மூட முயற்சி நடப்பதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''கால்வாயில் மண்ணை கொட்டியவர்களிடம் ஏற்கனவே நாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளோம். கால்வாயில் கொட்டப்பட்ட மணலை, அவர்களை கொண்டே அகற்றினோம். மீண்டும் மண் கொட்டப்பட்டு உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.