/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு
/
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு
ADDED : மே 15, 2024 11:41 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய 5 தாலுகாவில், 634 ரேஷன் கடைகள் உள்ளன.
இக்கடைகளில் உள்ள 4 லட்சத்து 3,817 ரேஷன் கார்டுகளுக்கு,. கார்டின் தன்மைக்கேற்ப சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கார்டுதாரர்களுக்கு மே மாதம் வழங்க வேண்டிய பாமாயில், துவரம் பருப்பு இதுவரை வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. ரேஷன் கடைக்கு பாமாயில், துவரம் பருப்பு வாங்க செல்லும் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 50 சதவீதம் துவரம் பருப்பு ஏற்கெனவே அனுப்பப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இரு நாட்களில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பாமாயிலும், மீதமுள்ள 50 சதவீத துவரம் பருப்பும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.