/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 9ல் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா
/
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 9ல் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 9ல் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 9ல் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா
ADDED : மே 07, 2024 03:52 AM

காஞ்சிபுரம் : சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷியாமா சாஸ்திரிகளின் ஜெயந்தி விழா வரும் 9ம் தேதி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடைபெற உள்ளது.
ஹைதராபாதில் உள்ள சனாதன சம்பிரதாய சங்கீத பாரதி அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரத்தில் 12வது தேசிய இசை திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. வரும் 9ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
துவக்க விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று விழாவை துவக்கி வைத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா. விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை இணைச் செயலர் காஞ்சி தியாகராஜன் வரவேற்றார்.
காலையில் சங்கர மடத்திலும், மாலையில் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி மண்டபத்திலும் இசை விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் அமெரிக்கா, பின்லாந்து, கனடா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்தும் திரளான இசை கலைஞர்கள் பங்கேற்று ஷியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை பாடி வருகிறார்கள். இன்று நடைபெறும் விழாவை ஐ.டி.பி.ஐ., வங்கி தலைவர் டி.என்.மனோகரன் துவக்கி வைக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஷியாமா சாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி விழா வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலையில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்போது, 350 இசைக்கலைஞர்கள் ஷியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை பாடுகிறார்கள்.
ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவரும், மிருதங்க வித்வானுமான சீனிவாச கோபாலன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.