/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி காமாட்சியம்மனுக்கு வெள்ளிக்குடை காணிக்கை
/
காஞ்சி காமாட்சியம்மனுக்கு வெள்ளிக்குடை காணிக்கை
ADDED : ஜூலை 16, 2024 11:23 PM

காஞ்சிபுரம், காஞ்சி காமாட்சியம்மன் பக்தர்களான சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த விஜயகுமார் - நீரஜா தம்பதியர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை புதிதாக தயார் செய்து, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யரிடம் நேற்று வழங்கினார்.
முன்னதாக, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், காணிக்கையாக வழங்க உள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக் குடையை வைத்து வழிபாடு செய்தனர்.
காணிக்கையாக வழங்கப்பட்ட குடை, கோவில் உற்சவத்தின்போது, உற்சவர் காமாட்சியம்மனுக்கும், தேர்த் திருவிழா நடைபெறும் நாட்களிலும் பயன்படுத்தப்படும் என, கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.