/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர தடுப்பின்றி சிங்காடிவாக்கம் குளம்
/
சாலையோர தடுப்பின்றி சிங்காடிவாக்கம் குளம்
ADDED : ஜூலை 08, 2024 05:42 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, சிங்காடிவாக்கம் கிராமத்தில், திருமாலீஸ்வரர் கோவில் குளம் உள்ளது.
இந்த குளக்கரை ஓரமாக செல்லும் சாலை வழியாக, தென்னேரி, மருதம், சின்னிவாக்கம், சிறுபாகல் ஆகிய பல்வேறு கிராமங்களில் இருந்து, சிங்காடிவாக்கம் கிராமம் வழியாக, சின்னையன்சத்திரம் பகுதிக்கு செல்கின்றனர்.
குறிப்பாக, சிங்காடிவாக்கம்- - சின்னையன்சத்திரம் பிரதான சாலை ஓரத்தில், இரு அபாயகரமான வளைவுகள் இருப்பதால், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி குளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, திருமாலீஸ்வரர்கோவில் குளத்தை ஒட்டி, தடுப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.