/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களால் நெரிசல்
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களால் நெரிசல்
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களால் நெரிசல்
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களால் நெரிசல்
ADDED : மார் 04, 2025 01:49 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட, திருமங்கையாழ்வார் சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில்,ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர், பத்திரப்பதிவு உள்ளிட்டபல்வேறு தேவைக்காக,சார் - பதிவாளர் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருவோர் தங்களின் கார், டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்களை, போக்குவரத்திற்கு இடையூறாக திருமங்கையாழ்வார் சாலையில் நிறுத்துகின்றனர்.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், சாலையோரம்நிறுத்தும் வாகனங்களின் மீது எதிர்பாராதவிதமாக உரசும் போது, வாக்கு வாதம் மற்றும் தகராறுஏற்பட்டு வருகிறது.
எனவே, போக்கு வரத்து அதிகம் உள்ள இந்த சாலையில்வாகனங்களை நிறுத்துவோர் மீது, ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய ஆபீஸ் எப்போது?
புதிய சார் - பதிவாளர் அலுவலகம் 1.85 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று தளங்களுடன் திருவள்ளூர் சாலையில் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.