/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுவாக்கம் ஏரி கலங்கல் தடுப்பு பலகைகள் மாயம்
/
சிறுவாக்கம் ஏரி கலங்கல் தடுப்பு பலகைகள் மாயம்
ADDED : மே 11, 2024 11:23 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீர் சிறுவாக்கம், காரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பும் போது, கலங்கல் வழியாக ஏரிநீர், உபரி நீராக வெளியேறும் வகையில், கலங்கல் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கலங்களில் இருந்த இரண்டு தடுப்பு பலகைகளும், சமீபத்தில் மாயமாகி உள்ளன. இதனால், மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது, தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மழைக்காலம் துவங்கும் முன், ஏரி கலங்களில் தடுப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.