ADDED : ஜூலை 09, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவ – மாணவியரின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ‛ரெடிங்டன் பவுண்டேஷன், எடு பிரிட்ஜ்’ நிறுவனம் சார்பில், முதுகலை மாணவ – மாணவியரின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
இதில், பயிற்றுநர் வினோத், கல்லுாரி பேராசிரியர்கள் எம்.பி.ஏ., எம்.காம்., எம்.ஏ., ஆங்கிலம் உள்ளிட்ட முதுகலை பயிலும் மாணவ – மாணவியர் என, 100 பேர் பங்கேற்றனர். கல்லுாரியின் வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர் வினு சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
