/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'செல்பி'யால் செய்வினை மிரட்டல் சின்னத்திரை நடிகர் அலறல்
/
'செல்பி'யால் செய்வினை மிரட்டல் சின்னத்திரை நடிகர் அலறல்
'செல்பி'யால் செய்வினை மிரட்டல் சின்னத்திரை நடிகர் அலறல்
'செல்பி'யால் செய்வினை மிரட்டல் சின்னத்திரை நடிகர் அலறல்
ADDED : ஜூலை 27, 2024 07:11 AM
சென்னை: 'செல்பி' எடுக்க வந்த பெண்ணுக்கு மறுப்பு தெரிவித்ததால், வீட்டின் முன் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீசி, 'செய்வினை செய்து விடுவேன்'என, மிரட்டிச் சென்றதாக 'டிவிசீரியல்' நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனி, பார்வதி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 45. இவர், திருவான்மியூர் காவல் நிலையத்தில் நேற்று அளித்துள்ள புகார்:
நான் பிரபல 'டிவி சேனல்' ஒன்றில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி என்ற நாடகத்தில் நடித்து வருகிறேன். கடந்தாண்டு, எங்கள் பகுதி அறுபடை வீடு முருகன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு, 40 வயதுடைய பெண்ஒருவரும் வந்திருந்தார்.
அந்த பெண், மொபைல் போன் வாயிலாக, என்னுடன் 'செல்பி' எடுக்கவும்முயன்றார். கோவில் என்பதால் நான் மறுத்துவிட்டேன். சில நாள் கழித்து என் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு, பேசி தொல்லை கொடுத்தார்.
இதனால் அந்தபெண்ணின் எண்ணை 'பிளாக்' செய்துவிட்டேன். சில நாட்கள் முன், என் வீட்டருகே வந்த அந்த பெண்,குங்குமம் தடவியஎலுமிச்சை பழத்தை வீசி, எனக்கு செய்வினை செய்து விடுவேன் என, மிரட்டிச்சென்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசார், புகார் மனு ஏற்பு ரசீது வழங்கிவிசாரித்து வருகின்றனர்.