/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
/
செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
ADDED : ஆக 05, 2024 01:56 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் செல்லியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், சிதிலமடைந்த பகுதிகள் சீர் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா நடந்தது.
கூழ்வார்த்தல் விழாவை தொடர்ந்து இரவு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.