/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுடுகாடு சுற்றுச்சுவர் ஓரம் மண் அரிப்பு
/
சுடுகாடு சுற்றுச்சுவர் ஓரம் மண் அரிப்பு
ADDED : ஜூன் 15, 2024 12:08 AM

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, ஓ.எம்.,மங்கலம் ஊராட்சியில், கூவம் ஆற்றை ஓட்டி சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடில், இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் தகன மேடை கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, சுடுகாடுக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுச்சுவர் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு இருப்பதால், சுற்றுச்சுவர் சேதமடையும் அபாயம் உள்ளது. குறிப்பாக, பலத்த மழை பெய்தால், சுற்றுச்சுவர் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு, ஓ.எம்.,மங்கலம் சுடுகாட்டின் சுற்றுச்சுவர் அடியுடன் சாயும் அபாயம் உள்ளது.
எனவே, மேலும் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, சுற்றுச்சுவர் ஓரம் மழை நீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை எழுந்துள்ளது.