/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் காஞ்சியில் நாளை கருத்து கேட்பு
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் காஞ்சியில் நாளை கருத்து கேட்பு
திடக்கழிவு மேலாண்மை திட்டம் காஞ்சியில் நாளை கருத்து கேட்பு
திடக்கழிவு மேலாண்மை திட்டம் காஞ்சியில் நாளை கருத்து கேட்பு
ADDED : மார் 06, 2025 12:55 AM
காஞ்சிபுரம்:தமிழகம் நகர்புற உள்ளமைப்பு சேவைகள் கழகம் சார்பில், காலநிலை மாற்றத்திற்கேற்ப நீண்ட கால விரிவான மற்றும் நிலையான தட்பவெட்பத்தை தாங்கக்கூடிய வகையில், சுற்றுப்புற சூழல் பாதுகாக்கும் வகையில், தொலைநோக்கு திட்ட அறிக்கை தயார் செய்திட என்.கே.பில்ட்கான் பிரைவேட் லிமிடெட் ஆலோசகரை நியமித்துள்ளது.
இத்திட்ட அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் வடக்கு மாட வீதியில் உள்ள ராதா பார்ட்டி ஹாலில், நாளை, மாலை 3:00 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், உணவகம், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், பள்ளி, கல்லுாரி, குடியிருப்போர் சங்கத்தினர், தனியார் தங்கும் விடுதி நிர்வாகத்தினர், சங்கத்தினர், பொதுமக்கள் பங்கேற்று தொலைநோக்கு திட்ட அறிக்கை தொடர்பாக தங்கள் ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரவிக்கலாம் என, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் தெரிவித்துள்ளார்.