/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்
/
நத்தப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : மார் 15, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியில், அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர்கள்தங்கும் குடியிருப்புகள் உள்ளன.
இந்த வளாகத்தில், முதியோர் நலன் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
முகாமிற்கு, நத்தப்பேட்டை செரீன் சேஷத்ரா முதியோர் குடியிருப்பு நல சங்க செயலர் திருமலை ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக்குழுவினர், முதியோர்களுக்குரத்தப் பரிசோதனை, இதய பரிசோதனை, எக்கோ உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசோதனை நடத்தினர். முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், நான்கு நபர்களுக்கு கண் அறுவைசிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.