/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெயில் கொளுத்துவதால் முன்னெச்சரிக்கை வெப்ப வாதத்திற்கு தனி வார்டு விரைவில் துவக்கம்
/
வெயில் கொளுத்துவதால் முன்னெச்சரிக்கை வெப்ப வாதத்திற்கு தனி வார்டு விரைவில் துவக்கம்
வெயில் கொளுத்துவதால் முன்னெச்சரிக்கை வெப்ப வாதத்திற்கு தனி வார்டு விரைவில் துவக்கம்
வெயில் கொளுத்துவதால் முன்னெச்சரிக்கை வெப்ப வாதத்திற்கு தனி வார்டு விரைவில் துவக்கம்
ADDED : மார் 06, 2025 12:16 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை காரணமாக வெளியில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அவ்வாறு வெயிலில் செல்லும்போது, அவர்களுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டு, உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறி உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.
இதனால் அதிக தாகம், தலை வலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வலிப்பு போன்ற பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இதுபோன்ற பாதிப்புகளால், பக்கவாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும்போது, மருத்துவவரை உடனே அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது
இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவுக்கான சிறப்பு வார்டு துவக்கப்பட உள்ளது. இதற்காக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வார்டில் வெப்ப அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க பிரத்யேகமாக செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உடல் வெப்ப பாதிப்புக்கு சிறப்பு வார்டு விரைவில் துவக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என, மருத்துவமனை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.