/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளையாட்டு போட்டிகள் 95 அணிகள் பங்கேற்பு
/
விளையாட்டு போட்டிகள் 95 அணிகள் பங்கேற்பு
ADDED : மார் 04, 2025 07:14 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வாரணவாசியில் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகள் துவங்கப்பட்டுள்ளன.
தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சீவ்காந்தி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 48 அணிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பதிவு செய்து விளையாட்டுகள் துவக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று, கைப்பந்து போட்டியில் 47 அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டியின் முடிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசு என, 3 லட்சம் ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.