ADDED : ஜூன் 13, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த அகஸ்டின் மகள் அர்ச்சனா 14. இவர், காட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
தன் வீட்டின் அருகாமையில் உள்ள குளத்தில் துணி துவைக்க சென்ற மாணவி அர்ச்சனா மீண்டும் வீடு திரும்பாத நிலையில், அவரது உடல் அப்பகுதி குளத்தில் மிதப்பதை கண்டனர்.
உத்திரமேரூர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மாணவி குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.