ADDED : ஏப் 14, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் விஜயகுமார், 14; சீட்டணஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு பயின்று வந்தார்.
விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு, சீட்டணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நண்பரான அஜய், 19, என்பவரோடு வீட்டில் இருந்து செங்கல்பட்டு நோக்கி, 'பல்சர்' டூ - வீலரில் சென்றார்.
அப்போது, ஒரக்காட்டுப்பேட்டை அருகே சாலை வளைவில், எதிரே வந்த 'பர்கோ' டிப்பர் மண் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மாணவர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த அஜயை அப்பகுதியினர் மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

