/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிக்கிம் வேத பாடசாலை மாணவர்கள் காஞ்சி சங்கரா பல்கலைக்கு வருகை
/
சிக்கிம் வேத பாடசாலை மாணவர்கள் காஞ்சி சங்கரா பல்கலைக்கு வருகை
சிக்கிம் வேத பாடசாலை மாணவர்கள் காஞ்சி சங்கரா பல்கலைக்கு வருகை
சிக்கிம் வேத பாடசாலை மாணவர்கள் காஞ்சி சங்கரா பல்கலைக்கு வருகை
ADDED : மே 04, 2024 11:29 PM

காஞ்சிபுரம்:இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான, சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில், காஞ்சி காமகோடி நிர்வாகத்தின் வாயிலாக பஞ்சாயதன சிவன் கோவில் மற்றும்வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் பாடசாலை இயங்கி வருகிறது.
இந்த பாடசாலையில் பயிலும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் நேற்று காலை, காஞ்சிபுரம் ஏனாத்துாரில் இயங்கிவரும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கு வந்தனர்.
பல்கலை ஓலைச்சுவடி பாதுகாப்பு மையம் மற்றும் பல்கலை நுாலகத்தையும் பார்வையிட்டனர்.
ஓலைச்சுவடி பாதுகாப்பு மற்றும் அதனுள்ள செய்திகளை நவீன உபகரணங்களைக் கொண்டு காப்பது குறித்து முனைவர் நாகேஸ்வர ராவ் மாணவர்களுக்கு விளக்கினார்.
பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஸ்ரீநிவாஸு,மாணவர்களுக்கு வேத பாடத்திற்குப்பின், பல்கலையின் இளங்கலை, முதுகலை, சமஸ்க்ருத பட்டப்படிப்புகள் குறித்தும், ஆராய்ச்சி படிப்புகள் பற்றியும், அப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கிக் கூறினார்.