/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிரீடம், மாலையுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
/
கிரீடம், மாலையுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
ADDED : ஜூன் 11, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : தமிழகம் முழுதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே துவங்கிவிட்டாலும், பள்ளி முதல் நாளான நேற்று மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்தது.
முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களை, பல அரசு பள்ளிகளில் ஆரவாரத்துடன், அன்போடு ஆசிரியர்கள் வரவேற்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த, 8 மாணவர், 8 மாணவியர் என, 16 சிறார்களுக்கு, தலையில் கிரீடம் அணிவித்து, மாலையிட்டு ஆரவாரத்துடன் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் வரவேற்றனர்.