/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் விபத்தில் காயமடைந்த ௹சப் - இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
/
பைக் விபத்தில் காயமடைந்த ௹சப் - இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
பைக் விபத்தில் காயமடைந்த ௹சப் - இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
பைக் விபத்தில் காயமடைந்த ௹சப் - இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
ADDED : ஆக 13, 2024 08:55 PM

ஸ்ரீபெரும்புதுார்: திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த, முதுகூரைச் சேர்ந்தவர் பழனி, 58. இவர், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். இவருக்கு, மனைவி புவனேஸ்வரி, 56, மற்றும் மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 9ம் தேதி, பழனி, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், மனைவி புவனேஸ்வரியுடன், பூந்தமல்லியில் இருந்து பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு, மண்ணுார் சாலை வழியே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், சின்ன வளர்புரம் பகுதிக்கு வந்த போது, நிலை தடுமாறி இருவரும் விழுந்தனர்.
இதில், தலையில் படுகாயமடைந்த பழனியை மீட்டு, தண்டலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.ஐ., பழனி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.