/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம்
/
இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம்
ADDED : மே 29, 2024 11:56 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கத்தில், பல ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டது. நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், காவாம்பயிர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த சுகாதார நிலையம் மூலம் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனிடையே, இந்த சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து, கட்டட தளத்தின் சிமென்ட் காரை உதிர்ந்து கொட்டியது. தளத்தின் கூரை கம்பிகளை தாங்கி நிற்பதால், 3 ஆண்டுகளாக கைவிடப்பட்ட கட்டடமாக உள்ளது.
அதையடுத்து, துணை சுகாதார நிலையம் தற்போது வரை ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இட நெருக்கடியில் இயங்குகிறது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, நெய்யாடுபாக்கத்தில் புதிய கட்டட வசதி ஏற்படுத்தி தர அப்பகுதியினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.