/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் திடீர் மரணம்
/
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் திடீர் மரணம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் திடீர் மரணம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் திடீர் மரணம்
ADDED : மே 29, 2024 06:30 AM
சென்னை, : சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 36. கூலி தொழிலாளி. இவர் மதுவிற்கு அடிமையானதால், அவரது குடும்பத்தினர், வானகரம் செட்டியார் அகரம் பிரதானசாலையில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 9 ம் தேதி சேர்த்தனர்.
முதற்கட்டமாக சிகிச்சைக்காக 10,500 ரூபாய் கட்டினர். மாதம் தோறும் 8,000 ரூபாய் கட்டணம். மாதத்தில் ஒருமுறை மட்டுமே வசந்தகுமாரை அவரது குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்து செல்ல அனுமதி என, தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வசந்தகுமாரின் தம்பி சுரேஷ்குமாருக்கு மது போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
'வசந்தகுமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்' என, தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, வசந்தகுமார் உயிரிழந்தது தெரியவந்தது.
வசந்தகுமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதால் அடித்து கொலை செய்துள்ளதாக சந்தேகிப்பதாகவும், மதுரவாயல் காவல் நிலையத்தில், தம்பி சுரேஷ் குமார் புகார் அளித்தார்.
புகாரின்படி, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.