/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திடீரென தீப்பிடித்த கார் காஞ்சி அருகே பரபரப்பு
/
திடீரென தீப்பிடித்த கார் காஞ்சி அருகே பரபரப்பு
ADDED : மே 01, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:திருவள்ளூர் மாவட்டம், நாகலாபுரம் அடுத்த, மிட்டகண்டிகையைச்சேர்ந்த ரவிகுமார். இவர் தன் உறவினருடன், 'டாடா நானோ' காரில், நேற்று, மாலை 4:45 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, பள்ளூர் அருகே காரின் முன் புறத்தில், திடீரென புகை வந்துள்ளது.
காரில் இருந்தவர்கள், தீயணைக்க முயற்சி செய்வதற்குள், காரில் தீ வேகமாக பரவி எரிந்து நாசமானது.
இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.