/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையின் நடுவே உயரமான 'மேன்ஹோல்' மூடியால் அவதி
/
சாலையின் நடுவே உயரமான 'மேன்ஹோல்' மூடியால் அவதி
ADDED : ஜூன் 12, 2024 11:18 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, ஆதிகேசவ பெருமாள் நகரில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற, பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலை நடுவே செல்லும் கழிவுநீர் குழாயின் 'மேன்ஹோல்' சாலையை விட உயரமாக உள்ளது.
இதனால், இவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், உயரம் அதிகமாக உள்ள மேன்ஹோல் மூடியில் மோதி நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், சாலையின் மட்டத்திற்கு, 'மேன்ஹோல்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.