ADDED : மே 04, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ- - மாணவியருக்கான கோடை கால திருக்குறள் பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஒரு பகுதியாக திருக்குறள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு, நமது மனித பிறப்பின் தத்துவனம், சிறுவர்களுக்கான அடிப்படை உரிமை, கடமைகள், சிறுவர்களுக்கான நெறிமுறைகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தின் உறுப்பினர், சமூக சேவகருமான வழக்கறிஞர் சக்திவேல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருக்குறள் பயிற்சியாளர்கள் புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன் மற்றும் பள்ளி மாணவ- - மாணவியர் பலர் பங்கேற்றனர்.