ADDED : மே 04, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. இதுதவிர, விவசாயிகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளும் உள்ளன.
இந்த இருவித நீர் பாசனங்களை நம்பி விவசாயிகள் நெல், கேழ்வரகு, வேர்க்கடலை ஆகிய பல வித பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார், தண்டலம், புரிசை ஆகிய பகுதிகளில், சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். தினசரி நீர் பாசனமும் செய்யப்படுகிறது.
இருப்பினும், தினசரி 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த வெயிலால், நீர் பாசனம் வரப்பு ஓரமாக இருக்கும் தென்னை மரங்களும் கருகி வருகின்றன.
இதே நிலை நீடித்தால், தென்னை மரங்களை வேருடன் அகற்ற வேண்டி இருக்கும் என, விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.