/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுங்கு விநாயகர் கோவில் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
சுங்கு விநாயகர் கோவில் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 11, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்காடு:சென்னை அருகே, மாங்காடு நகராட்சி உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின் கட்டுப்பாட்டில் சுங்கு விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.
கோவில் கோபுரங்களில் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இக்கோவிலில் ஒரு கால பூஜை மட்டும் செய்யப்படுகிறது.
இந்த கோவில் குறித்த விபரங்கள் அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பழமையான இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.