/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
/
பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
ADDED : ஜூன் 28, 2024 10:55 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, பனப்பாக்கம் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் பூட்டை உடைத்து, 20,000 ரூபாய், 2 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி கிரீடம் திருடப்பட்டது, அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் பால் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி, நேற்று காலை 5:30 மணிக்கு விளக்கை அணைக்க கோவிலுக்கு சென்றார். அப்போது, கோவிலின் முன்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோவில் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20,000 ரூபாய், 2 சவரன் தங்க செயின் மற்றும் வெள்ளி கிரீடம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.