/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரி களுக்கான 'டி - 20' குருநானக் அணி சாம்பியன்
/
கல்லுாரி களுக்கான 'டி - 20' குருநானக் அணி சாம்பியன்
கல்லுாரி களுக்கான 'டி - 20' குருநானக் அணி சாம்பியன்
கல்லுாரி களுக்கான 'டி - 20' குருநானக் அணி சாம்பியன்
ADDED : மார் 04, 2025 01:09 AM

சென்னை, குருநானக் கல்லுாரி சார்பில், 11வது பவித் சிங் நாயர் மெமோரியல் டி - 20 கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடக்கிறது. போட்டியில், ஆண்களில், 16 அணிகள் 'லீக்' முறையிலும், பெண்களில், 10 அணிகள் 'நாக் - அவுட்' முறையிலும் மோதி வருகின்றன.
பெண்களுக்கான போட்டியில், 'சூப்பர் லீக்' போட்டியின் முடிவில், சென்னைகுருநானக் மற்றும் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று காலை குருநானக் வளாகத்தில் நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி, 12.1 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய குருநானக் அணி 7.3 ஓவர்களில், 2 விக்கெட் இழப்பிற்கு, 37 ரன்கள் அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'சாம்பியன்' கோப்பை வென்றது.