/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வையாவூர் அய்யப்பா நகருக்கு ரூ.49.44 லட்சத்தில் தார் சாலை
/
வையாவூர் அய்யப்பா நகருக்கு ரூ.49.44 லட்சத்தில் தார் சாலை
வையாவூர் அய்யப்பா நகருக்கு ரூ.49.44 லட்சத்தில் தார் சாலை
வையாவூர் அய்யப்பா நகருக்கு ரூ.49.44 லட்சத்தில் தார் சாலை
ADDED : ஜூலை 06, 2024 10:44 PM
வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, அய்யப்பா நகரில் இருந்து, நல்லுார் வரையுள்ள சாலை, மழை காலங்களில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது.
இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், கிராம வாசிகளும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வாலாஜாபாத், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களை மேம்படுத்தும் திட்டம் 2023 - 24ன் கீழ் மொத்தம், 49.44 லட்சம் ரூபாய் செலவில் ஏனாத்துார் அருகே உள்ள நல்லுார் முதல் அய்யப்பா நகர் வரை, 1.6 கி.மீ., நீளத்திற்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.