/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெட்ரோலால் வாகனம் துடைத்த டெய்லருக்கு பலத்த தீக்காயம்
/
பெட்ரோலால் வாகனம் துடைத்த டெய்லருக்கு பலத்த தீக்காயம்
பெட்ரோலால் வாகனம் துடைத்த டெய்லருக்கு பலத்த தீக்காயம்
பெட்ரோலால் வாகனம் துடைத்த டெய்லருக்கு பலத்த தீக்காயம்
ADDED : டிச 14, 2024 08:11 PM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் மோகன், 50. பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, இவரது வீட்டின் வெளியே அகல் தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, மோகன் தனது இருசக்கர வாகனத்தை பெட்ரோல் வைத்து துடைத்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக கையில் வைத்திருந்த பெட்ரோல் கேன் கீழே விழுந்ததில், அகல் விளங்கில் எரிந்த நெருப்பால், அவர் மீது தீ பற்றியது.
இதில், பலத்த தீ காயம் அடைந்த மோகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.