/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 8 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு
/
காஞ்சியில் 8 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு
ADDED : மார் 02, 2025 12:19 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக வரும் 6ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கணினி வழியில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 6ம் தேதிக்கான தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி, மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லுாரி, மேற்கு தாம்பரம் சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி.
காஞ்சிபுரம் யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஒரகடம் ராசி பொறியியல் கல்லுாரி, மாங்காடு முத்துக்குமரன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி, படப்பை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி ஆகிய எட்டு தேர்வு மையங்களில் கணினி வழியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.
தேர்வு மையங்களில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வெவ்வேறு பாடங்களில் கணிணி வழி மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். இத்தேர்வு மையங்களுக்கு
ஒதுக்கப்பட்ட தேர்வர்கள், முற்பகல் தேர்வுக்கு காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், பிற்பகல் தேர்வுக்கு பிற்பகல் 12:30 மணி முதல், 1:30 மணி வரையிலும்
அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் தேர்வுகூட நுழைவுச்சீட்டு மற்றும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.