/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு...
/
தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு...
ADDED : மே 27, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்த சதீஷ், 27, என்பவர், மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், விஜயலட்சுமி நகரில் வீடு எடுத்து தங்கி, 'சென்ட்ரிங்' வேலை செய்து வந்தார்.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சித்தாலப்பாக்கம் பிரதான சந்திப்பில், சாலையை சதீஷ் கடக்க முயன்றபோது, அவ் வழியே வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், தனியார் பேருந்து ஓட்டுனரான நெற்குன்றத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 36, என்பவரை கைது செய்தனர்.

