நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத், : வாலாஜாபாதில் இருந்து, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், வெங்குடி அருகே சாலையோரம் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, வாலாஜாபாத் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
அதன்படி, அங்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ், 30,திருமணமாகாதவர்என்பது தெரிய வந்தது.
இவர்,காஞ்சிபுரம் அடுத்த, கருக்குப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
தினேஷ் எவ்வாறு உயிரிழந்தார் என்பதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.