/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முத்து மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா
/
முத்து மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா
ADDED : ஜூன் 30, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியும், வாகனங்களை இழுத்தும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முத்து மாரியம்மன் வீதி உலா வந்தார். அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ் வார்க்கப்பட்டது.