/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செய்யாற்றில் பாலம் கட்ட நடவடிக்கை நெய்யாடுபாக்கம் வாசிகளுக்கு விடிவு
/
செய்யாற்றில் பாலம் கட்ட நடவடிக்கை நெய்யாடுபாக்கம் வாசிகளுக்கு விடிவு
செய்யாற்றில் பாலம் கட்ட நடவடிக்கை நெய்யாடுபாக்கம் வாசிகளுக்கு விடிவு
செய்யாற்றில் பாலம் கட்ட நடவடிக்கை நெய்யாடுபாக்கம் வாசிகளுக்கு விடிவு
ADDED : ஜூன் 08, 2024 04:39 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து புல்லம்பாக்கம், வயலக்காவூர் வழியாக வெங்கச்சேரி செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையில், நெய்யாடுபாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே காவாந்தண்டலம் செல்வதற்காக, அப்பகுதி வாசிகள் சார்பில் அமைக்கப்பட்ட மண் தரைப்பாலம் உள்ளது.
வயலக்காவூர், நெய்யாடுபாக்கம், காவாம்பயிர், இருமரம், காவாந்தண்டலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி, இளையனார்வேலுார், கம்மராஜபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், காவாந்தண்டலம் சுற்றுவட்டார பகுதி மாணவ - மாணவியர், நெய்யாடுபாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, இந்த தரைப்பாலம் வழியாக சைக்கிள் மற்றும் நடந்தும் சென்று வருகின்றனர்.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இந்த மண் தரைப்பாலம் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்படுகிறது.
அச்சமயங்களில், நெய்யாடுபாக்கம்- - காவாந்தண்டலம் கிராமத்தின் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சுற்றுவட்டார கிராமத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால், நெய்யாடுபாக்கம் -- காவாந்தண்டலம் செய்யாற்றின் குறுக்கே, நிரந்தரமான கான்கிரீட் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், செய்யாற்றின் குறுக்கே பாலம் கட்ட தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:
நெய்யாடுபாக்கம் செய்யாற்றின் குறுக்கே பாலம் அமைக்க நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். பொதுப்பணி துறை பரிந்துரையின் படி, பாலம் கட்டுவதற்கான நடவடிக்கையை, நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, இதற்கான அளவீடு மற்றும் மண் மாதிரி சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.