/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அத்துமீறும் திருநங்கையரால் அவதி மவுனம் காக்கும் மாவட்ட நிர்வாகம்
/
அத்துமீறும் திருநங்கையரால் அவதி மவுனம் காக்கும் மாவட்ட நிர்வாகம்
அத்துமீறும் திருநங்கையரால் அவதி மவுனம் காக்கும் மாவட்ட நிர்வாகம்
அத்துமீறும் திருநங்கையரால் அவதி மவுனம் காக்கும் மாவட்ட நிர்வாகம்
ADDED : ஆக 03, 2024 12:47 AM
காஞ்சிபுரம்,:ஆன்மிக தலமான காஞ்சிபுரத்திற்கு, தினமும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில் என, பிரசித்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன.
இங்கு வரும் வெளியூர் பக்தர்களுக்கு, திருநங்கையர் தரும் தொல்லையால், பல பக்தர்கள் கோவிலுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர்.
கோவில் வாசலிலேயே, ஐந்துக்கும் மேற்பட்ட திருநங்கையர் நின்றுக் கொண்டு, பக்தர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். ஆண், பெண், சிறுவர்கள் என, அனைவரிடமும் பணம் கேட்பதால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால், காஞ்சிபுரத்தில் இப்பிரச்னை தொடர்கிறது. குறிப்பாக, வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் வாசலில், பக்தர்கள் தினமும் இப்பிரச்னையை சந்திக்கின்றனர்.
பணம் தராத பக்தர்களிடம் திருநங்கையர் அநாகரிகமாக நடந்து கொள்வதுடன், அவர்களை வசைபாடுவதும் தொடர்கிறது. இதை தடுக்க வேண்டிய போலீசார் அமைதியாக இருப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
மாதந்தோறும் சட்டம் - ஒழுங்கு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த பிரச்னை பற்றி பல முறை ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, திருநங்கையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.