/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காரில் பறந்த தி.மு.க., கொடி அகற்றியது பறக்கும் படை
/
காரில் பறந்த தி.மு.க., கொடி அகற்றியது பறக்கும் படை
காரில் பறந்த தி.மு.க., கொடி அகற்றியது பறக்கும் படை
காரில் பறந்த தி.மு.க., கொடி அகற்றியது பறக்கும் படை
ADDED : மார் 22, 2024 10:30 PM

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான, கடந்த 16ம் தேதியில் இருந்தே, தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்குவந்ததாக தேர்தல் கமிஷன்அறிவித்தது.
இதைதொடர்ந்து,காஞ்சிபுரம் மாவட்டத்தில்பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ குழு என, 84 குழுவினர்,முக்கிய சாலை சந்திப்பு, ஊரின் எல்லை பகுதியில் வாகன சோதனையில்ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, தேர்தல் பறக்கும் படை அலுவலர் வசந்தி தலைமையிலான குழுவினர், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை பகுதியில் நேற்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது, தி.மு.க., கொடியுடன் கார் ஒன்று வந்தது. காரை மடக்கி சோதனைசெய்தனர்.
பின், தேர்தல் நடத்தை விதியை மீறி காரில்பறந்த தி.மு.க., கொடியை அகற்ற பறக்கும் படை குழுவினர் உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து, காரில் பறந்து கொண்டிருந்த தி.மு.க., கொடி அகற்றப்பட்டது.

