/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் பிசியால் காஞ்சியில் அதிகாரிகளை பிடிக்க முடியவில்லை
/
தேர்தல் பிசியால் காஞ்சியில் அதிகாரிகளை பிடிக்க முடியவில்லை
தேர்தல் பிசியால் காஞ்சியில் அதிகாரிகளை பிடிக்க முடியவில்லை
தேர்தல் பிசியால் காஞ்சியில் அதிகாரிகளை பிடிக்க முடியவில்லை
ADDED : மார் 24, 2024 12:21 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர், உதவிப்பொறியாளர் ஆகிய பல நிலை ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் உள்ளனர்.
ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு செய்தல் ஆகிய பணிகளில் ஊராட்சி நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
சம்பந்தப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தால், நாங்கள் லோக்சபா தேர்தல் பணியில் பிசியாக உள்ளோம். சம்பந்தப்பட்ட நபர்களிடம் கூறி சரி செய்ய கூறுகிறோம் என்கின்றனர்.
குறிப்பாக, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம மக்களின் அழைப்பை ஏற்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், ஏனாத்துார், சிங்காடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், பகலில் மின் விளக்கு வீணாக எரிகிறது. இதனால், மின்சாரம் வீணாவதோடு மக்களின் வரி பணமும் வீணாகிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டாலும், கிராம மக்களின் குறைபாடுகள் மீது அக்கரை செலுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

