/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பம் ஒரு வருடமாக புகார் கூறியும் 'நோ யூஸ்'
/
சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பம் ஒரு வருடமாக புகார் கூறியும் 'நோ யூஸ்'
சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பம் ஒரு வருடமாக புகார் கூறியும் 'நோ யூஸ்'
சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பம் ஒரு வருடமாக புகார் கூறியும் 'நோ யூஸ்'
ADDED : ஏப் 23, 2024 04:16 AM

ஸ்ரீபெரும்புதுார், : குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கல்சேரி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, செரப்பனஞ்சேரி -- கூழங்கல்சேரி சாலையில், கம்பங்கள் வழியே மின் வழித்தடம் செல்கிறது.
இந்த நிலையில், இவற்றில் சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
இதனால், மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் சூழல் உள்ளதால், அவ்வழியாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு இருசக்கர வாகனங்களில் தங்களின் குழந்தைகளை ஏற்றி செல்லும் பெற்றோர் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மேலும், சாய்ந்துள்ள மின் கம்பத்தால், மின்கம்பத்தில் செல்லும் மின் ஒயர் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் பள்ளி பேருந்து, தாழ்வாக செல்லும் மின் ஒயரில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
கடந்தாண்டு மழையின் போது, இந்த சாலையில், ஏரியோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்தது. இதுகுறித்து ஓராண்டாக படப்பை மின்வாரிய இளநிலை பொறியாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தற்போது, மேலும் சாய்ந்துள்ள மின்கம்பத்தால், மின் விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. உயிர்ச்சேதம் ஏற்படும் முன், மின்வாரிய உயர் அதிகாரிகள், மின் கம்பத்தை சரிசெய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

