ADDED : ஆக 30, 2024 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 48; விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை, வேலு வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிக்க அப்பகுதி வயல்வெளிக்கு சென்றுள்ளார். மதியம் வரை வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் அப்பகுதிக்கு சென்று தேடினர்.
அப்போது, வயல்வெளியில் வேலு உயிரிழ்ந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி விசாலாட்சி அளித்த புகாரின்படி, பெருநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், வேலுவுக்கு வலிப்பு நோய் பிரச்னை உள்ளதாகவும், சம்பவ நாளன்று வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.