/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிணற்றில் விழுந்தது ஆடு மீட்க சென்ற விவசாயி பலி
/
கிணற்றில் விழுந்தது ஆடு மீட்க சென்ற விவசாயி பலி
ADDED : செப் 14, 2024 07:23 PM
உத்திரமேரூர்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தீட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளபிள்ளை, 60; கால்நடை விவசாயி. இவர், வழக்கம் போல, நேற்று முன்தினம், தன் ஆடுகளை அப்பகுதி வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது வயல்வெளியில் இருந்த பயன்பாடற்ற திறந்தவெளி கிணற்றில், அவரது ஆடு ஒன்று தவறி விழுந்தது. கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தயாளபிள்ளை, கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த தயாளபிள்ளையை மீட்டனர். ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
தயாளபிள்ளை உடலை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.