/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுகாதார வளாகம் படுமோசம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
சுகாதார வளாகம் படுமோசம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
சுகாதார வளாகம் படுமோசம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
சுகாதார வளாகம் படுமோசம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : பிப் 27, 2025 12:23 AM

சிட்டியம்பாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு ஊராட்சி, சிட்டியம்பாக்கத்தில், கடந்த 2003ம் ஆண்டு மகளிர் சுகாதார வளாக கட்டடப்பட்டது. இக்கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி மின்மோட்டார், ஐந்து ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. ஆனால், மின்மோட்டாரை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
தண்ணீர் வசதி இல்லாததால், கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால், செடி, கொடிகள் வளர்ந்து, சுகாதார வளாகம் சீரழிந்துள்ளது.
எனவே, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிட்டியம்பாக்கம் வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.