/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்ணின் அறையை எட்டி பார்த்தவருக்கு அடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி
/
பெண்ணின் அறையை எட்டி பார்த்தவருக்கு அடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி
பெண்ணின் அறையை எட்டி பார்த்தவருக்கு அடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி
பெண்ணின் அறையை எட்டி பார்த்தவருக்கு அடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி
ADDED : மே 28, 2024 04:12 AM
ஸ்ரீபெரும்புதுார், : ஒரகடம் அருகே, நள்ளிரவில் பெண்களின் அறையை ஜன்னல் வழியே எட்டி பார்த்தவரை, சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், விளிச்சனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன், 28; ஒரகடம் அடுத்த, வாரணவாசியில் நண்பர்களுடன் வாடகைக்கு தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பில் வேலுார் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றார். அன்றிரவு 10:30 மணிக்கு மீண்டும் அறைக்கு வந்தார்.
மது போதையில் இருந்த பரசுராமன், இரவு 11:30 மணிக்கு, அதே பகுதியில் உள்ள பெண்கள் அறைக்கு சென்று, ஜன்னல் வழியே எட்டி பார்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பெண்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர், பரசுராமனை பிடித்து தர்ம அடி அடித்தனர். இதில், தலை மற்றும் உடலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த பரசுராமனின் நன்பர்கள் அவரை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர், நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் படி, கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த எத்திராஜ், 30, சஞ்சய், 23, தினேஷ்குமார், 23, வெங்கடாசலம், 34, மணிகண்டன் 19, தயாநிதி, 19 உள்ளிட்டவர்களை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.