/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன ஓட்டிகளுக்கு மோர் வழங்கிய போலீசார்
/
வாகன ஓட்டிகளுக்கு மோர் வழங்கிய போலீசார்
ADDED : மே 01, 2024 12:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., என அரசியல் கட்சியினர், கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதேபோல, பாதசாரிகள், வியாபாரிகள் தண்ணீர் குடிக்க, கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த வாரம், கலெக்டர் வளாகம் எதிரே, கலெக்டர் கலைச்செல்வி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்நிலையில், காவல் துறை சார்பில், வாகன ஓட்டிகளுக்கு கோடை வெயிலை தணிக்கும் வகையில், போக்குவரத்து போலீசார், காஞ்சிபுரத்தில் மோர், தண்ணீர் போன்றவை வழங்கினர்.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்திய போலீசார், அவர்களுக்கு மோர் வழங்கினர்.
அன்றாடம் நகரின் பல்வேறு இடங்களில், மோர் உள்ளிட்ட பானங்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.